2020 ஆம் ஆண்டின் புவி நேரமானது மார்ச் 28 ஆம் தேதியன்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அனுசரிக்கப்பட்டது.
புவி நேரம் என்பது சர்வதேச இயற்கை நிதியத்தினால் (WWF - World Wide Fund for Nature) ஒருங்கிணைக்கப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.
புவி நேரமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் கடைசி சனிக் கிழமையன்று நிகழ்கின்றது.
இது இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அனுசரிக்கப்படுகின்றது.
இது 2007 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் “விளக்குகளை அணைத்தல்” என்ற ஒரு நிகழ்வாகத் தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வானது அத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைப்பதற்காக தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் வணிகர்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகின்றது.
இந்தப் புவி நேரத்தின் முக்கியமான நோக்கம் புவி வெப்பமயமாதல், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்துப் பிரச்சாரம் மேற்கொள்வதாகும்.