TNPSC Thervupettagam

புஷ்கின் விருது - பேராசிரியர் மீட்டா நரேன்

August 29 , 2019 1796 days 512 0
  • வெளிநாட்டு ரஷ்யப் படிப்பிற்கு அவருடைய பங்களிப்பிற்காக மதிப்புமிக்க 2019  ஆம் ஆண்டின் ‘புஷ்கின் விருதானது’ ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மீட்டா நரேன் என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் பட்டதாரி மாணவர்களுக்கான ரஷ்ய ஆய்வுப் பாடப் புத்தகங்களை மீண்டும் எழுதுவதற்கு நரேன் பங்களித்துள்ளார்.
  • அவரால் ஈர்க்கப்பட்ட புத்தகங்கள் பல முன்னாள் சோவியத் நாட்டைச் சேர்ந்த  நிறுவனங்கள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன.
இதுபற்றி
  • ரஷ்ய மொழி மற்றும் ரஷ்யக் கலாச்சாரத்தை மேம்படுத்தியதற்காக ரஷ்ய அரசால்  இந்திய அறிஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது புஷ்கின் விருதாகும்.
  • இது 1999 இல் நிறுவப்பட்டது. பிரபல ரஷ்ய எழுத்தாளரும் கவிஞருமான அலெக்சாண்டர் எஸ். புஷ்கின் என்பவரின் நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டது.

.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்