பூச்சிக்கொல்லிகள் - இந்தியாவில் நச்சுத்தன்மைக்கான முன்னணி காரணி
June 5 , 2021 1269 days 636 0
இந்திய மக்களின் உடலில் நிலவும் நச்சுத்தன்மை பற்றிய ஆய்வு2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை:ஒரு முறையான மறுசீராய்வு மற்றும் பிறழ் பிரிப்பு ஆய்வு (A systematic review and meta-analysis) எனும் ஒரு ஆய்வானது பிரிட்டிஷ் மருத்துவ இதழால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் உடலில் ஒட்டு மொத்தமாக 63% அளவிற்கு நச்சுத்தன்மை நிலவுவதற்கு பூச்சிக்கொல்லிகளே முக்கியக் காரணம் என இந்த அறிக்கை கூறுகிறது.
வேளாண்மை மற்றும் வீட்டு உபயோகத்திற்கு வேண்டி பூச்சிக் கொல்லிகள் அதிகளவில் பயன்படுத்தப் படுவதே இதற்குக் காரணமாகும்.
இந்த ஆய்வின்படி, இளம் பருவத்தினரிடையே 65 சதவீதமும் குழந்தைகளிடையே 22% நச்சுத் தன்மையும் நிலவுகிறது.
வட்டார ரீதியிலான நச்சுத் தன்மைப் பரவல் குறித்த ஆய்வானது,
வட இந்தியாவில் அதிகபட்சமாக 75 சதவீதமும்,
அதனைத் தொடர்ந்து தென் இந்தியா (65.9%)
மத்திய இந்தியா (59.2%)
மேற்கு இந்தியா (53.1%)
வடகிழக்கு இந்தியா (46.9%) மற்றும்
கிழக்கு இந்தியா (38.5%)
என்ற அளவில் நச்சுத்தன்மை இருப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளதைக் குறிப்பிட்டு உள்ளது.