TNPSC Thervupettagam

பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்ட துணியிழை

July 12 , 2024 135 days 207 0
  • பெங்களூரில் உள்ள குருத்தணு அறிவியல் மற்றும் மீளுருவாக்க அறிவியல் கல்வி நிறுவனமானது (inStem) பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் திறன் கொண்ட துணியிழையினை உருவாக்கியுள்ளது.
  • இது கரிம பாஸ்பரஸ் சேர்மங்கள் (ஆர்கனோபாஸ்பேட்) அடிப்படையிலான பூச்சிக் கொல்லிகளின் தாக்கத்தினைத் திறம் மிக்க முறையில் மட்டுப்படுத்துகிறது.
  • இந்தத் துணியிழையானது, 150 முறை கழுவினாலும் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத் தன்மையை தக்க வைத்துக் கொள்ளும்.
  • விவசாயிகள் பூச்சி க்கொல்லியை அடிக்கடி பயன்படுத்தி அதனை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வதால், இது நாள்பட்ட நச்சுத்தன்மையையும் மிக கடுமையான உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
  • இந்த சிறிய மூலக்கூறுகளைக் கொண்ட துணியானது விவசாயிகள் நாள்பட்ட நச்சுத் தன்மையை எதிர்கொள்வதைத் தடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்