சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு உடனடி தீங்கு விளைவிக்கக்கூடிய இருபது பூச்சிக் கொல்லிகளின் விற்பனைக்கு பஞ்சாப் மாநில அரசு தடை விதித்துள்ளது.
மோனோகுரோடோபோஸ், டிரைகுளோரோபான், பென்புராகார்ப் உட்பட முக்கியமான தீங்கு விளைவிக்கக்கூடிய இருபது பூச்சிக் கொல்லிகள் மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தால் இந்த பூச்சிக் கொல்லிகளானது சுகாதாரம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய முதல் வகுப்பு (Class – I) பூச்சிக் கொல்லிகளாக வகைப் படுத்தப்பட்டுள்ளன.