ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர்ப் பெருக்க அமைப்பு ஆனது, "தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்" வகுப்புடன் "பூஞ்சை" என்ற சொல்லினை இணைக்கச் செய்யமாறு உலகளாவிய அமைப்புகளை வலியுறுத்தும் வகையிலான பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
இது பூஞ்சைகளின் ஒரு முக்கியத்துவத்தை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
வளங்காப்பு முன்னெடுப்புகளில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் கொண்டுள்ள ஒரு முக்கியத்துவ நிலையில் ஒன்றாக பூஞ்சைகளின் முக்கியத்துவத்தினை மேம்படுத்தச் செய்வதையும் அதனை உள்ளீடு செய்வதனையும் ஐக்கிய நாடுகள் சபை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, பல்வேறு கருத்துக்கள் மற்றும் கொள்கை முடிவுகளை வடிவு அமைப்பதில் இவற்றின் சொற்கூறுகளின் தாக்கத்தை எடுத்துக் காட்டுகிறது.
முன்னதாக, IUCN அமைப்பின் இனங்களின் ஏற்பமைவு ஆணையமானது (SSC) "பூஞ்சையியல் சார்ந்த உள்ளீடுகளை” பயன்படுத்த உள்ளதாக அறிவித்தது.
பூஞ்சை என்பது பல்வேறு யூகாரியோடிக் நுண்ணுயிரிகளின் குழுவாகும்.