TNPSC Thervupettagam

பூஞ்சை வளங்காப்பிற்கான உறுதிப்பாடு

October 30 , 2024 24 days 84 0
  • சிலி மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய அரசாங்கங்கள் 'பூஞ்சை வளங்காப்பிற்கான ஒரு உறுதிப்பாட்டினை' தயாரித்துள்ளன.
  • காளான்கள், பூஞ்சை, ஈஸ்ட், லிச்சென் மற்றும் பூஞ்சைக் காளான்கள் ஆகியவற்றின் வளங்காப்பிற்காக விலங்குகள் மற்றும் தாவரங்களுடன் சேர்த்து வகைப் பிரித்தலில் 'பூஞ்சை' எனப்படும் அவற்றின் சொந்தப் பிரிவினைப் பெற உள்ளன.
  • கொலம்பியாவின் கலி என்னுமிடத்தில் நடைபெற்ற 16வது பங்குதாரர்கள் மாநாட்டின் (COP16) போது ஐக்கிய நாடுகள் சபையின் உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கை (CBD) அமைப்பிற்கு இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப் பட்டது.
  • இது அவற்றின் வளங்காப்பினை நன்கு முன்னெடுத்துச் செல்வதையும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மக்களுக்கும் அவற்றின் நன்மைகளைப் பேண அனுமதிக்கும் சில உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மொத்தமுள்ள 2.2 மற்றும் 3.8 மில்லியன் வகை பூஞ்சைகளில் எட்டு சதவிகிதம் மட்டுமே அறிவியல் ரீதியாக அறியப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2,000 புதிய உயிர் இனங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்