சிலி மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய அரசாங்கங்கள் 'பூஞ்சை வளங்காப்பிற்கான ஒரு உறுதிப்பாட்டினை' தயாரித்துள்ளன.
காளான்கள், பூஞ்சை, ஈஸ்ட், லிச்சென் மற்றும் பூஞ்சைக் காளான்கள் ஆகியவற்றின் வளங்காப்பிற்காக விலங்குகள் மற்றும் தாவரங்களுடன் சேர்த்து வகைப் பிரித்தலில் 'பூஞ்சை' எனப்படும் அவற்றின் சொந்தப் பிரிவினைப் பெற உள்ளன.
கொலம்பியாவின் கலி என்னுமிடத்தில் நடைபெற்ற 16வது பங்குதாரர்கள் மாநாட்டின் (COP16) போது ஐக்கிய நாடுகள் சபையின் உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கை (CBD) அமைப்பிற்கு இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப் பட்டது.
இது அவற்றின் வளங்காப்பினை நன்கு முன்னெடுத்துச் செல்வதையும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் மக்களுக்கும் அவற்றின் நன்மைகளைப் பேண அனுமதிக்கும் சில உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொத்தமுள்ள 2.2 மற்றும் 3.8 மில்லியன் வகை பூஞ்சைகளில் எட்டு சதவிகிதம் மட்டுமே அறிவியல் ரீதியாக அறியப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2,000 புதிய உயிர் இனங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன.