TNPSC Thervupettagam

பூடானில் உள்ள புலிகள் எண்ணிக்கை

August 3 , 2023 484 days 302 0
  • இந்தியா மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் வனங்களில் உள்ள புலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத் தக்க அளவில் உயர்ந்துள்ளன.
  • பூடானின் காடுகளில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ள நிலையில், இது 2015 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முறைசார் கணக்கெடுப்பில் பதிவான எண்ணிக்கையை விட 27% அதிகமாகும்.
  • இந்தியாவில் உள்ள புலிகளின் மொத்த எண்ணிக்கையானது 3,682 ஆக பதிவாகி உள்ளதையடுத்து, உலகிலுள்ள  75% புலிகளின் வாழ்விடமாக இந்தியா உள்ளது.
  • நேபாளத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்து 355 ஆக உள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முந்தையக் கணக்கெடுப்பின் படி, வங்காளதேசத்தில் குறிப்பாக சுந்தரவனக் காடுகளில் சுமார் 114 புலிகள் உள்ளன.
  • இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 40,000 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை என்பது, 1972 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் அனைத்திந்தியப் புலிகள் கணக்கெடுப்பில் வெறும் 1,827 புலிகள் மட்டுமே இருப்பதாகக் கண்டறியப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்