TNPSC Thervupettagam
July 15 , 2021 1103 days 569 0
  • பூடான் நாடானது தனது விரைவு எதிர்வினைக் குறியீட்டு முறைக்காக (Quick  Response – QR) இந்தியாவின் ஒருங்கிணைக்கப்பட்ட பண வழங்கீட்டு இடைமுக (Unified Payments Interface – UPI) தரநிலைகளை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக மாறியுள்ளது.
  • சிங்கப்பூரை அடுத்து வணிக தளங்களில் BHIM UPI முறையை ஏற்றுக் கொண்ட இரண்டாவது நாடாக  பூடான் உருவெடுத்துள்ளது.
  • பூடானில் BHIM UPI QR அடிப்படையிலான கொடுப்பனவுகளை அமல்படுத்துவதற்காக அரசு நாணய ஆணையத்துடன் (Royal Monetary Authority) மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டிணைவு பற்றி இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தின் சர்வதேச பிரிவான NPCI சர்வதேச கொடுப்பனவு எனும் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • மேலும் Rupay அட்டைகளை வழங்குவதையும், ஏற்பதையும், மற்றும் BHIM UPI முறையையும் ஏற்றுக் கொண்ட ஒரே நாடாகவும் பூடான் உருவெடுக்க உள்ளது.

பாரத் பணவழங்கீட்டு இடைமுகச் செயலி (BHIM)

  • இது இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகத்தினால் உருவாக்கப்பட்ட இந்திய கைபேசி பணவழங்கீட்டுச் செயலி ஆகும்.
  • B.R. அம்பேத்கரின் நினைவாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
  • இது 2016  ஆம் ஆண்டு டிசம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்