TNPSC Thervupettagam

பூமிக்கு அருகில் உள்ள பொருட்கள் (NEO)

June 5 , 2020 1638 days 624 0
  • பூமிக்கு அருகில் உள்ள பொருட்களுக்கான நாசாவின் ஆய்வு மையமானது (CNEOS - Center for Near-Earth Object Studies) 5 குறுங்கோள்கள் பூமியைக் கடக்கும் என்று கூறியுள்ளது.
  • விண்வெளிக் கற்கள் என்று அழைக்கப்படும் இந்தக் குறுங்கோள்களான 2020KF, 2020KE4, 2020KK7, 2020KD4, 2020KJ1 ஆகியவை பூமியைக் கடக்க இருக்கின்றன.
  • 2020 KE4 என்ற குறுங்கோளானது வளிமண்டலத்திலேயே எரிந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • குறுங்கோள்கள் மற்றும் வால்மீன்கள் ஆகியவை பூமிக்கு அருகில் உள்ள பொருட்களாகும். இவை சூரியனைச் சுற்றி வருகின்றன.
  • இவை சுற்றும் போது, பூமிக்கு அருகே அதன் சுற்று வட்டப்பாதையில் 30 மில்லியன் மைல்கள் என்ற தொலைவு வரம்பிற்குள் வருவதனால் இவை NEO என்று ஆகின்றன.
  • குறுங்கோள்கள் பெரும்பாலும் சூரியக் குடும்பத்தின் வெப்பமான உள்ளக அடுக்கில் வியாழன் மற்றும் செவ்வாய்க் கோள்களின் சுற்று வட்டப் பாதைக்குள் உருவாகின்றன.
  • மறுபுறம், வால்மீன்கள் சூரியக் குடும்பத்தின் குளிர்மிகுந்த வெளிப்புற அடுக்கில்  உருவாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்