பூமிக்கு அருகில் உள்ள பொருட்களுக்கான நாசாவின் ஆய்வு மையமானது (CNEOS - Center for Near-Earth Object Studies) 5 குறுங்கோள்கள் பூமியைக் கடக்கும் என்று கூறியுள்ளது.
விண்வெளிக் கற்கள் என்று அழைக்கப்படும் இந்தக் குறுங்கோள்களான 2020KF, 2020KE4, 2020KK7, 2020KD4, 2020KJ1 ஆகியவை பூமியைக் கடக்க இருக்கின்றன.
2020 KE4 என்ற குறுங்கோளானது வளிமண்டலத்திலேயே எரிந்து விடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
குறுங்கோள்கள் மற்றும் வால்மீன்கள் ஆகியவை பூமிக்கு அருகில் உள்ள பொருட்களாகும். இவை சூரியனைச் சுற்றி வருகின்றன.
இவை சுற்றும் போது, பூமிக்கு அருகே அதன் சுற்று வட்டப்பாதையில் 30 மில்லியன் மைல்கள் என்ற தொலைவு வரம்பிற்குள் வருவதனால் இவை NEO என்று ஆகின்றன.
குறுங்கோள்கள் பெரும்பாலும் சூரியக் குடும்பத்தின் வெப்பமான உள்ளக அடுக்கில் வியாழன் மற்றும் செவ்வாய்க் கோள்களின் சுற்று வட்டப் பாதைக்குள் உருவாகின்றன.
மறுபுறம், வால்மீன்கள் சூரியக் குடும்பத்தின் குளிர்மிகுந்த வெளிப்புற அடுக்கில் உருவாகின்றன.