TNPSC Thervupettagam

பூமிதான வாரியம் மறு நியமனம்

March 19 , 2018 2313 days 1797 0
  • பூமிதான வாரியத்தின் பதவிக்காலம் முடிந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின், மாநில அரசு அதில் ஒரு தலைவர் மற்றும் 12 உறுப்பினர்களைக் கொண்டு அதை மறுநியமனம் செய்துள்ளது.
  • கிராமத் தொழில்துறை மற்றும் காதித் துறையின் அமைச்சர் ஜி.பாஸ்கரன் பூமிதான மன்றத்தின் தலைவர் மற்றும் நிலச் சீர்திருத்தங்களின் இயக்குநர் (மன்றத்தின் உறுப்பினர் செயலாளரைப் போன்று) ஆவார்.
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிலச் சீர்திருத்தங்களுக்கான ஆணையர், விவசாயத் துறையின் ஆணையர், தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்களுக்கான இயக்குநர் ஆகியோர் இந்த மன்றத்தின் மற்ற அலுவல் உறுப்பினர்கள் ஆவார்.

பூமிதான இயக்கத்தின் வரலாற்றுப் பின்னணி            

  • ஆச்சார்யா வினோபா பாவே ஆரம்பித்த பூமிதான யக்ஞ இயக்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்களை ஒழுங்கு முறைப்படுத்துவதற்காக 1958 தமிழ்நாடு பூமிதான யக்ஞ சட்டம் இயற்றப்பட்டது.
  • இந்த மன்றத்தின் முக்கிய நடவடிக்கை பூமிதான இயக்கத்திற்கு நிலங்களை முறைப்படுத்தி அதன் உரிமைகளை பூமிதான இயக்கத்திற்கு மாற்றுவதும், நிலமற்ற ஏழைகளுக்கு அந்த நிலங்களைப் பகிர்ந்தளிப்பதுமே ஆகும்.
  • 2006ல், இந்த மன்றத்தின் மீதான கட்டுப்பாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையிடமிருந்து நிலச் சீர்திருத்தங்கள் துறைக்கு மாற்றப்பட்டது.
  • ஆரம்பத்தில் 6 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக இருந்தாலும் பின்னாளில் 2000 ஆண்டில் அது 12 பேர் கொண்ட அமைப்பாக மாற்றப்பட்டது.
  • 2009ம் ஆண்டு, அந்த மன்றம் 14 உறுப்பினர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மன்றம் 13 உறுப்பினர்களைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்