முழுமையாக சூரிய ஆற்றலால் இயங்கி கொண்டிருப்பதற்காக கொச்சின் சர்வதேச விமான நிலையம் லிமிடெட் (Cochin International Airport Ltd - CIAL) பூமிப் பரிசின் சாம்பியன் 2018 விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது ஐக்கிய நாடுகளினால் (united Nations) தொடங்கப்பட்ட உயர்ந்த சுற்றுச்சூழல் விருதாகும்.
கொச்சின் சர்வதேச விமான நிலையம் சமீபத்தில் உலகின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் விமான நிலையமாக மாறியது.
இவ்விமான நிலையம் நாட்டில் 2017-2018ல் கையாளப்பட்ட போக்குவரத்துகளில் சர்வதேச அளவில் நான்காவது இடத்திலும் மொத்த போக்குவரத்தில ஏழாவது இடத்திலும் உள்ளது.
இவ்விருது நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியில் செப்டம்பர் 26, 2018-ல் வழங்கப்படும்.
பூமிப் பரிசின் சாம்பியன் ஆனது 2005ல் நிறுவப்பட்டது.