ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டமானது உலகெங்கிலும் உள்ள ஏழு இளம் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோரை இதில் குறிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நிலையான சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான துணிவான யோசனைகளுடன் உள்ள 30 வயதிற்குட்பட்ட ஏழு தொழில்முனைவோருக்கு இது வழங்கப் படுகிறது.
இந்தியாவில் இருந்து வித்யுத் மோகன் (Takachar என்பதின் இணை நிறுவனர்) இந்தப் பரிசிற்கு அங்கீகரிக்கப் பட்டுள்ளார்.
விவசாயக் கழிவுகளை எரிக்கும் போது அவை தீங்கு விளைவிக்கும் பசுமைக்குடில் வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுவதைத் தடுத்து அந்த விவசாயக் கழிவுகளை எரித்து அவற்றைக் கரி மற்றும் உரமாக மாற்றும் ஒரு நடமாடும் சிறிய இயந்திரத்தினை உருவாக்கியதில் அவர் ஒரு முன்னோடியாக உள்ளார்.