பூமியின் ஆரம்பகாலக் காந்தப்புலத்தின் பழமையான எச்சங்களைக் கொண்டுள்ளப் பழங்காலப் பாறைகளைக் கிரீன்லாந்தில் புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் பாறைகள் சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்றும், குறைந்த பட்சம் 15 மைக்ரோ டெஸ்லா வலிமை கொண்ட காந்தப்புலத்தின் அடையாளங்களை தக்கவைத்துக் கொள்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்தனர்.
பழமையான காந்தப் புலம் இன்று பூமியின் காந்தப்புலத்தின் அளவை ஒத்துள்ளது.
முந்தைய ஆய்வுகள் பூமியில் குறைந்தது 3.5 பில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையான காந்தப் புலத்திற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளன.
இந்தப் புதிய ஆய்வானது காந்தப்புலத்தின் காலக் கட்டத்தினை மேலும் 200 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக குறிப்பிடுகிறது.