TNPSC Thervupettagam

பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் (Earth overshoot day)

July 27 , 2018 2184 days 1005 0
  • 2018-ன் பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் ஆகஸ்ட் 1 அன்று ஏற்பட உள்ளது. 1970களில் சுற்றுச்சூழல் எல்லை மீறல் தொடங்கியதிலிருந்து இந்த தினம் சற்று முன்பே நிகழ உள்ளது.
  • உலகத் தட பிணையம் (Global Footprint network) மற்றும் இயற்கைக்கான உலக அளவிலான நிதி (World Wide Fund - WWF) ஆகியவற்றால் இது கணக்கிடப்பட்டுள்ளது.

  • இயற்கையின் மீதான மனிதனின் வருடாந்திர தேவை குறிப்பிட்ட வருடத்தில் பூமியால் மறுஉற்பத்தி செய்யும் திறனை மீறும் தினம் இத்தினமாகும்.
  • 2018-ல் மொத்த வருடத்திற்கான இயற்கையின் வளங்கள் மொத்தமும் வெறும் 8 மாதக் காலத்திலேயே உபயோகப் படுத்தப்பட்டுவிட்டன.
  • அதாவது மனித இனம் தற்பொழுது பூமியின் சுற்றுச்சூழலினால் மறுஉற்பத்தி செய்யும் திறனை விட 1.7 மடங்கு வேகத்தில் இயற்கையை பயன்படுத்துகிறது.
  • இந்த வருடம் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் கடந்த வருட தினத்தை விட இரண்டு நாட்கள் முன்பாகவே வருகிறது. ஆகஸ்ட் 1-க்கு பிறகு ஒவ்வொரு தினமும் பூமியின் இயற்கை வளங்களின் மீதான சுரண்டலாகவே கருதப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்