TNPSC Thervupettagam

பூமியின் சுழற்சி இயக்கவியல்

August 23 , 2024 92 days 148 0
  • துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உருகும் நிகழ்வானது புவியை மெதுவாகச் சுழலச் செய்துள்ளதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது ஒரு நாளின் உண்மையான கால அளவில் சிறிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
  • ஏனெனில் ஒரு ஸ்கேட்டர் எந்த வகையில் சுழன்றாலும் நிலைமத் திருப்புத் திறன் மற்றும் கோணத் திசைவேகத்தின் பெருக்கற்பலனான கோண உந்தம் ஆனது கடை பிடிக்கப் படுகிறது.
  • அதே போல பனிக்கட்டிகள் உருகும் போதும், ​​பூமியின் வளைவு அதிகரித்து, பூமத்திய ரேகையை (நிலநடுக்கோடு) சுற்றியுள்ள பகுதி சிறிது நீளமாகிறது.
  • நிலைமத் திருப்புத் திறன் அதிகரிப்பதால், சுழற்சி விகிதம் குறைகிறது.
  • பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள கடல் மட்டங்களில் மாறி வருகின்ற பருவநிலை ஏற்படுத்தும் விளைவுகள் பூமியின் சுழற்சி வீதத்தை ஒரு நூற்றாண்டுக்கு சுமார் 1.3 மில்லி விநாடிகள் (ms) குறைத்துள்ளன.
  • நிலவு ஓத உராய்வு அல்லது பூமியின் பெருங்கடல்களின் நீரில் நிலவின் இழு விசையால் ஏற்படும் ஓத மாற்றங்கள் எனப்படும் ஒரு செயல்முறையானது, ஏற்கனவே கிரகத்தின் சுழற்சியை ஒரு நூற்றாண்டுக்கு 2 ms என்ற வேகத்தில் குறைத்து வருகிறது.
  • எனவே, அணுக் கடிகாரங்களால் கணிக்கப்பட்டுள்ள நேரத்தை விட, பூமி ஒரு நாளை நிறைவு செய்ய சுமார் 2 ms என்ற அதிக நேரம் எடுத்துக் கொண்டால், ஒரு 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாளில் சுமார் 4 மில்லி விநாடிகள் அதிகரிக்கும்.
  • மில்லி விநாடிகள் அதனுடன் கூட்டப்படும் போது, புவி சுழற்சியின் வேகத்திற்கு ஈடு செய்வதற்காக லீப் விநாடிகள் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்