பூமியின் மையத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள புதிய புதிரான அடுக்காக மேற்பரப்பு நீர் புவிக் கிரகத்திற்குள் ஆழமாக ஊடுருவியதன் விளைவாக உருவான முதன்மை E அடுக்கானது உள்ளது.
மேற்பரப்பு நீரைச் சுமந்து செல்லும் கண்டத்தட்டுகள் பல பில்லியன் ஆண்டுகளாக பூமிக்குள் ஆழமாக இதனைக் கொண்டு சென்றுள்ளன.
உட்புகுந்த நீரானது அதிக அழுத்தத்தின் கீழ் கருவ அடுக்கின் பொருட்களுடன் வேதியியல் ரீதியாக வினைபுரிகிறது.
இந்த வினையானது வெளிப்புற மையத்தில் ஹைட்ரஜன் நிறைந்த, சிலிக்கான் -குறைந்த அடுக்கு உருவாக வழிவகுக்கிறது.
இந்தச் செயல்பாட்டின் மூலம் உருவாகும் சிலிக்கா படிகங்கள் கவச அடுக்குடன் இணைந்து கலந்து, அதன் ஒட்டு மொத்த இயைபைப் பாதிக்கிறது.
திரவ உலோக அடுக்கில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அதன் அடர்த்தி குறைவதற்கும் நில அதிர்வுப் பண்புகளை மாற்றுவதற்கும் காரணமாக இருக்கலாம்.