1,600 அடி அளவுள்ள ஒரு மாபெரும் குறுங்கோளானது, மே 15 ஆம் தேதியன்று பூமியைக் கடந்து சென்றது.
388945 (2008 TZ3) எனப்படும் குறுங்கோளானது மே 16 ஆம் தேதியன்று நமது புவியை நெருங்கி கடந்து சென்றது.
இந்தக் குறுங்கோள் பூமியை சுமார் 2.5 மில்லியன் மைல் தொலைவில் கடந்து சென்றது.
இருப்பினும், 388945 என்ற குறுங்கோள் நமது புவியை நெருங்குவது இது முதல் முறை அல்ல.
இது 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் பூமிக்கு மிக அருகில் 1.7 மில்லியன் மைல் தொலைவில் புவியைக் கடந்து சென்றது.
அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இந்த விண்வெளிப் பாறையானது சூரியனைச் சுற்றி வரும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியைக் கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.
அடுத்த முறை இது 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் புவியை நெருங்கி வரும்.
ஆனால் வெகு தொலைவில் 6.9 மைல் தொலைவில் புவியை இது கடந்து செல்லும்.