TNPSC Thervupettagam

பூம்புகார் என்ற துறைமுக நகரத்தின் காலம்

February 5 , 2023 533 days 362 0
  • பூம்புகார் என்பது தமிழ்நாட்டில் தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடல் நீரில் மூழ்கிய ஒரு பழங்காலத் துறைமுக நகரமாகும்.
  • காவேரிப் பூம்பட்டினம் என்றும் அழைக்கப்படும் பூம்புகார் நகரானது, சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல்சார் வரைபடத்தில் இருந்து மறைவதற்கு முன்பாக, தென் கிழக்கு ஆசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் கடல் சார் ரீதியில் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தது என்று முந்தைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
  • சோழப் பேரரசின் போது முக்கியத்துவம் பெற்ற இந்தத் துறைமுக நகரமானது சுமார் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று ஆரம்பத்தில் நம்பப் பட்டது.
  • கடலோர ஆய்வுகள் மற்றும் புவியியல் அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமீபத்திய ஆய்வில், இந்த நகரம் குறைந்தது 15,000 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்