TNPSC Thervupettagam
January 13 , 2020 1781 days 644 0
  • உலகத் தரம் வாய்ந்த ஒரு எஃகு மையமாக பூர்வோதயாவைத்  தொடங்க உள்ளதாக மத்திய எஃகு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இது கிழக்கு மாநிலங்களின் விரைவான வளர்ச்சித் திட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பூர்வோதயா” திட்டத்தைச் செயல்படுத்துவதில் இந்த அமைச்சகமானது இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்புடன் (Confederation of India Industries - CII) இணைந்துச் செயலாற்ற உள்ளது.
  • மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதி ஆகிய 5 கிழக்கு மாநிலங்கள் நிலக்கரி, பாக்சைட் மற்றும் டோலமைட் இருப்புக்களை அதிகமாகக் கொண்டுள்ளன. 
  • இப்பகுதியில் ஹால்டியா, பாரதீப், கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற முக்கியத் துறைமுகங்கள் உள்ளன.
  • இப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள 12 முக்கிய எஃகு மண்டலங்களாவன:
    • கலிங்கா நகர் - ஒடிசா
    • அங்குல் - ஒடிசா
    • ரூர்கேலா - ஒடிசா
    • ஜார்சுகுடா - ஒடிசா
    • நாகர்னர் - சத்தீஸ்கர்
    • பிலாய் - சத்தீஸ்கர்
    • ராய்ப்பூர் - சத்தீஸ்கர்
    • ஜாம்ஷெட்பூர் - ஜார்க்கண்ட்
    • பொகாரோ - ஜார்க்கண்ட்
    • துர்காபூர்- மேற்கு வங்கம்
    • கொல்கத்தா - மேற்கு வங்கம்
    • விசாகப்பட்டினம் - ஆந்திரா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்