செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐபோன்கள் தயாரிக்கும் பெகாட்ரான் உற்பத்திப் பிரிவை தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
இது இம்மாநிலத்தின் இரண்டாவது ஐபோன் உற்பத்திப் பிரிவாகும்.
ஃபாக்ஸ்கான் (தமிழ்நாட்டில்) மற்றும் விஸ்ட்ரான் (பெங்களூரு) ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் அதன் உற்பத்தி அலகினை அமைக்கும் மூன்றாவது ஆப்பிள் கைபேசியின் விற்பனையாளர் நிறுவனம் பெகாட்ரான் ஆகும்.
இந்த ஆலையானது மத்திய அரசின் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
இந்த ஆலையானது தமிழ்நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மின்னணு முதலீட்டு நிறுவனமாகும்.