TNPSC Thervupettagam

பெகாட்ரான் உற்பத்திப் பிரிவு

October 9 , 2022 652 days 494 0
  • செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஐபோன்கள் தயாரிக்கும் பெகாட்ரான் உற்பத்திப் பிரிவை தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது இம்மாநிலத்தின் இரண்டாவது ஐபோன் உற்பத்திப் பிரிவாகும்.
  • ஃபாக்ஸ்கான் (தமிழ்நாட்டில்) மற்றும் விஸ்ட்ரான் (பெங்களூரு) ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் அதன் உற்பத்தி அலகினை அமைக்கும் மூன்றாவது ஆப்பிள் கைபேசியின் விற்பனையாளர் நிறுவனம் பெகாட்ரான் ஆகும்.
  • இந்த ஆலையானது மத்திய அரசின் உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆலையானது தமிழ்நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மின்னணு முதலீட்டு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்