TNPSC Thervupettagam

பெங்களுருவின் நீர்ப் பாதுகாப்பு மதிப்பீடு

March 23 , 2020 1711 days 543 0
  • கர்நாடகாவின் தலைநகரான பெங்களுரு நகரமானது இந்தியாவின் நீர்ப் பற்றாக்குறையுள்ள மாவட்டங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இது மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் (Jal Shakti Abhiyaan - JSA)  முன்னெடுப்பிற்கான ஒரு சவாலாக விளங்குகின்றது.
  • இந்த முன்னெடுப்பானது நாடு முழுவதிலும் உள்ள 255 நீர்ப் பற்றாக்குறையுள்ள மாவட்டங்களின் நீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகளைக் களைய இருக்கின்றது.
  • பெங்களுரு நகரமானது JSAன் கீழ் நீர்ப் பாதுகாப்புப் பணிகளின் அடிப்படையில் மிகவும் மோசமாக 200வது இடத்தில் உள்ளது. இதன் மதிப்பீடு 11 சதவிகிதமாகும்.
  • 2008 ஆம் ஆண்டு முதல் இதற்கான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இச்சட்டங்கள் அனைத்துப் பொது இடங்கள் மற்றும் குடியிருப்புக் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயமாக்கியுள்ளன.
  • தற்பொழுது வரை பெங்களுரு நகரமானது குறைந்து வரும் நீர் ஆதாரங்கள் மற்றும் பல்வேறு ஏரிகளில் ஏற்பட்டுள்ள அதிக அளவிலான மாசுபாடு ஆகிய பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது.
  • மேலும், கர்நாடகாவின் 2017ஆம் ஆண்டு கழிவுநீர்க் கொள்கையானது JSAன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இடையீடுகளைப் போன்றே இடையீடுகளை வலியுறுத்துகின்றது. இது “20 சதவிகிதம்” என்ற மறு பயன்பாட்டு இலக்கை நிர்ணயித்துள்ளது.
  • மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் பெங்களுரு நகரின் மதிப்பீட்டுப் பட்டியலில் பிரதிபலிக்கவில்லை.  5 பாதுகாப்புத் தளங்கள் குறித்து பதிவேற்றப்படும் தகவல்களைத் தவிர அனைத்துத் துறைகளிலும் சுழிய மதிப்பை இந்நகரம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்