அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் 16 வது புதிய தலைவராக ஜேரோம் எச். போவெல் நான்காண்டு பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
100 வருட வரலாறுடைய அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் பெண் தலைவரான ஜனேட் யேல்லனைத் தொடர்ந்து தற்போது போவெல் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவிக்கு போவெல் 2017ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்பினால் பரிந்துரை செய்யப்பட்டார்.
2018 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இவரது நியமனத்திற்கு அமெரிக்க செனட் அவை அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து போவெல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.