அமெரிக்காவின் நிதித் துறை அமைச்சகம் இரண்டு பெண்களின் கையெழுத்துடன் முதல் அமெரிக்க காகிதப் பண நோட்டுகளை அச்சிட்டுள்ளது.
$1 மற்றும் $5 மதிப்புள்ள புதிய நாணயத் தாள்களில் கருவூலச் செயலர் (அமெரிக்க நிதி அமைச்சர்) ஜேனட் யெல்லென் மற்றும் லின் மலெர்பா ஆகியோரின் கையொப்பம் உள்ளது.
அமெரிக்காவின் காகிதப் பண நோட்டுகள் கிரீன்பேக் என்று பிரபலமாக அழைக்கப் படுகின்றன.