TNPSC Thervupettagam

பெண்களுக்கான தொழில்நுட்ப வழிகாட்டிகள் (W2RT)

June 24 , 2018 2350 days 860 0
  • பெண்களுக்கான தொழில்நுட்ப வழிகாட்டிகள் என்னும் தனித்துவ நிகழ்ச்சியின் நோக்கம் STEM/தொழில்நுட்பம் (Science, Technology, Engineering and Mathematics/அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) ஆகிய துறைகளின் மூத்த நிலையில் பெண்களின் தலைமைப் பண்புகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் துறைகளில் அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றை அதிகப்படுத்துவதாகும்.
  • இந்நிகழ்ச்சியானது முக்கியத் தொழில்நுட்பமான தகவல் தொழில் நுட்பம் (IT), தகவல் தொழில் நுட்பத்தால் செயல்படுத்தப்பட்ட சேவைகள் (ITES)/வணிக செயல்முறை மேலாண்மை (BPM), உற்பத்தி பொருள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் (R & D) ஆகிய துறைகளில் முற்றிலும் பெண்கள் தொழில் பண்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
  • இது நாஸ்காம் (NASSCOM- National Association of Software and Services Companies), நாஸ்காம் துறைத் திறன்கள் மன்றம் மற்றும் இந்தியாவின் தரவுப் பாதுகாப்பு மன்றம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
  • W2RT (Women Wizards Rule Tech) ஆனது 2018ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நாஸ்காம் டி அண்ட் ஐ (D and I) உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது.

நாஸ்காம் (NASSCOM)

  • மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசியச் சங்கம் என்பது இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை புற ஒப்படைப்பு (BPO) ஆகியவற்றின் வர்த்தக மன்றம் ஆகும்.
  • நாஸ்காம் அமைப்பானது லாப நோக்கமற்ற நிறுவனமாக 1988-ல் தொடங்கப்பட்டது.
  • நாஸ்காமின் தலைமையிடம் புது தில்லியில் அமைந்துள்ளது. நாஸ்காமின் பிராந்திய அலுவலகங்கள் பெங்களுரு, சென்னை, ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா, மும்பை, பூனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்