மத்திய அரசாங்கமானது நிர்பயா நிதியின் கீழ் எட்டு நகரங்களுக்கு (தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுரு, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் லக்னோ) பாதுகாப்பு நகரத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கியுள்ளது.
தெரு விளக்குகள், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து, காவல் துறை மற்றும் இதர திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து பெண்களுக்கு பாதுகாப்பான நகரத்தை ஏற்படுத்துதல் இதன் நோக்கமாகும்.
இத்திட்டமானது போக்குவரத்தின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் துயிலுமிடம், பொலிவுறு LED தெரு விளக்குகள், ஒரு முனை நெருக்கடி மையம், பொது பாதுகாப்பு பொத்தான் மற்றும் தடயவியல் மற்றும் இணையவழி குற்றப்பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.