TNPSC Thervupettagam

பெண்களுக்கான புதிய வரைவுக் கொள்கை 2021

January 1 , 2022 934 days 7006 0
  • தமிழக அரசானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று பெண்களுக்கான புதிய வரைவுக் கொள்கையினை (2021) வெளியிட்டுள்ளது.
  • இந்தக் கொள்கையானது 5 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறைப் படுத்தப்படும்.
  • இந்தப் புதியக் கொள்கையானது பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்களுக்கு தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சிகளை அளித்திட எண்ணுகின்றது
  • இது MGNREGS  திட்டத்தின் கீழ் ஒற்றைத் தலைமையின் கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமையின் கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மேலும் 50 வேலை நாட்கள் வழங்குவது குறித்து தெரிவிக்கிறது.
  • இதன் படி பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 33.3%  இடஒதுக்கீடும் பெண்களுக்கு வழங்கப் படும்.
  • 19 வயது வரையிலான இளம் பருவப் பெண்களுக்கு குறிப்பாக கல்வியில் பின்தங்கியப் பிரிவிற்குப் பயனளிப்பதற்காக வேண்டி கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா என்ற திட்டமானது விரிவுபடுத்தப்படும்.
  • இந்த நடவடிக்கை அவர்கள் தங்கள் பள்ளிக் கல்வியை முடிப்பதில் உதவி வழங்கும்.
  • ஒவ்வொரு ஆண்டும் சமூகத்தின் பின்தங்கியப் பிரிவுகளிலிருந்தும், குறிப்பாக  STEM என்ற துறைகளில் இருந்தும் குறைந்தது 1000 பெண்  மாணவ ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கெண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்