TNPSC Thervupettagam

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 25

November 27 , 2019 1768 days 824 0
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 ஆம் தேதியன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப் படுகின்றது.
  • உலகெங்கிலும் உள்ள பெண்கள் கற்பழிப்பு, குடும்ப வன்முறை மற்றும் பிற வன்முறைகளுக்கு உட்பட்டுள்ளனர் என்பதையும் இது போன்ற பிரச்சினைகள் மறைக்கப் படுவதைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "ஆரஞ்சு நிற உலகம்: தலைமுறை சமத்துவம் கற்பழிப்பிற்கு எதிராக நிற்கின்றது" என்பதாகும்.
  • இது போன்ற ஒரு தினமானது 1981 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்ணியவாதிகளால் முதல் முறையாக கடைபிடிக்கப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1999 ஆம் ஆண்டில்  முதன்முறையாக இத்தினத்தை அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்