TNPSC Thervupettagam

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பிற்கான சர்வதேச தினம் - நவம்பர் 25

November 26 , 2017 2554 days 756 0
  • ஆண்டுதோறும் உலகம் முழுவதும் நவம்பர் 25 ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பிற்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
  • பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது சாத்தியமே என்பதை வெளிப்படுத்துவதற்காகவும, இந்த தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2017-ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு” அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு: பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருதல்”.
  • 1960-ஆம் ஆண்டு கரிபியன் தீவுக் கூட்டங்களில் உள்ள டொமினிகன் குடியரசில் ரபேல் ட்ருஜில்லோவின் கொடுங்கோல் ஆட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட அரசியல் ஆர்வலர்களான மூன்று மீராபால் சகோதரிகளின் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்