பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நவம்பர் 25
November 27 , 2018 2346 days 1390 0
பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது உலகமெங்கிலும் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இவ்வருடத்தின் கருத்துரு “Orange the World: #HearMeToo” என்பதாகும்.
ஒவ்வொரு மாதத்தின் 25-ம் தேதியும் 2009-ல் தொடங்கப்பட்ட ‘Say NO – UNiTE to End Violence against Women’ என்ற ஐ.நா. மகளிர் அமைப்பின் பிரச்சாரத்தினால் ஆரஞ்சு தினமாக அத்தினம் நியமிக்கப்பட்டது.
இந்த தினமானது 1960 ஆம் ஆண்டில் ரஃபேல் துருஜில்லோவின் சர்வாதிகார ஆட்சியின் போது டொமினிகன் குடியரசில் கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் ஆர்வலர்களான 3 மிராபல் சகோதரிகளின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா. பொதுச் சபையானது 2008 பிப்ரவரி 7 அன்று இதன் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு அதிகாரப் பூர்வமாக நவம்பர் 25-ம் தேதியை அத்தினமாக நியமித்தது.