பெண்கள் உரிமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை
March 9 , 2025 23 days 91 0
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பானது, “Women’s Rights in Review 30 Years After” என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ஐ.நா. பெண்கள் அமைப்பானது, பெய்ஜிங்+30 செயல்பாட்டு நிரலையும் வெளியிட்டு உள்ளது.
பாலினச் சமத்துவத்தினை ஆதரிப்பதற்காக வேண்டி 1995 ஆம் ஆண்டு முதல் சுமார் 1,531 சட்டச் சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஆண்கள் கொண்டுள்ள சட்ட உரிமைகளில் 64 சதவீதத்தை மட்டுமே பெண்கள் கொண்டுள்ளனர்.
88 சதவீத நாடுகளில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், அவற்றின் அமலாக்கம் சீரற்றதாகவே உள்ளது மற்றும் முக்கியமானச் சேவைகளுக்கான நிதி உதவி போதுமானதாக இல்லை.
பெண்கள், ஆண்களை விட சராசரியாக சுமார் 20 சதவீதம் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர்.
பெண்கள் தற்போது, உலகளாவியப் பாராளுமன்ற இடங்களில் 27 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளனர் என்ற நிலையில் இது 1995 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்தது.