TNPSC Thervupettagam

பெண்கள் குறித்த 4வது உலகக் கருத்தரங்கின் 25வது நினைவு தினம்

October 8 , 2020 1419 days 574 0
  • 2020 ஆம் ஆண்டில், உலக சமூகமானது பெண்கள் குறித்த 4வது உலகக் கருத்தரங்கின் 25வது நினைவு தினத்தையும் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டுத் தளம் (1995) ஏற்றுக் கொள்ளப் பட்டதையும் குறிக்கின்றது.
  • 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் ஐக்கிய நாடுகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கிற்கான பெயர் பெண்கள் குறித்த 4வது உலகக் கருத்தரங்கு : சமத்துவம், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான நடவடிக்கைஎன்று வைக்கப் பட்டது.
  • இந்தக் கருத்தரங்கில், உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் செயல்திட்ட நடவடிக்கைக்கான பெய்ஜிங் தளம் எனப்படும் உலகளாவிய சட்டப்படியான  சமத்துவத்தை அடைவதற்காக ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டன.
  • பெண்கள் குறித்த முதலாவது உலகக் கருத்தரங்கானது 1975 ஆம் ஆண்டில் மெக்சிகோ நகரில் நடத்தப் பட்டது. இதற்கு அடுத்து இந்த கருத்தரங்கு கோப்பன்ஹேகன், நைரோபி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்