- பெண்களின் அடிப்படை உரிமையான தங்கள் விருப்பப்பட்ட இடத்தில் வணங்குவது எனும் உரிமையினை பெண்ணினம் எனும் பிரத்யேகமான உடல் கூறியல் காரணத்தை மட்டும் அடிப்படையாக காரணம் காட்டிப் பாரபட்சப்படுத்த அல்லது வேறுபடுத்த முடியுமா என்ற வழக்கினை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
- அரசியல் சாசனம் தீர்க்கப்பட வேண்டிய கேள்விகள் இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , நீதிபதிகள் பானுமதி மற்றும் அசோக் புஷன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் அமர்வினால் நிர்ணயம் செய்யப்பட்டன.
- பொது வழிபாட்டிற்கான கேரள இந்து தளங்கள் ( அனுமதிக்கான அங்கீகாரம்) விதிமுறைகள் (1965) 10 வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்கள் வழிபாட்டு தளங்களுக்கு செல்வதற்கான தடையை ஒரு மத நிறுவனம் அனுமதிக்குமா எனவும்,
- அவ்வாறு அனுமதித்தால் அது சமத்துவ மற்றும் பாலின நீதி வகையிலான அடிப்படை உரிமைகளை மீறுவதாக கணக்கில் அடங்குமா எனவும்
இந்த அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும்
அரசியல் சாசன அமர்வு
- இந்திய அரசியலமைப்பு அர்த்தப்படுத்தும் சட்டத்தைப் பற்றிய அடிப்படையான கேள்விகள் கொண்ட வழக்கினை தீர்ப்பளிக்க குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்டு அமைக்கப்பட்ட அமர்விற்கு அரசியல் சாசன அமர்வு என பெயரளிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஏற்பாடு அரசியலமைப்பு விதி 145(3) என்ற விதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகும்.
- இந்தியாவின் தலைமை நீதிபதி அரசியலமைப்பு அமர்வை உருவாக்கவும் , வழக்குகளை அதற்கு பரிந்துரைக்கவும் சக்தி படைத்தவர் ஆவார்.