1,783 பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களுடன் பெங்களூரு முதல் இடத்திலும், அதனைத் தொடர்ந்து 1,480 மற்றும் 1,195 நிறுவனங்களுடன் மும்பை மற்றும் டெல்லி ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
324, 184 மற்றும் 181 நிறுவனங்களுடன் நொய்டா, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகியவை முறையே எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களைப் பிடித்து உள்ளன.
இந்தியாவின் புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பு, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் மூன்றாவது பெரிய மையமாக உள்ளது.
இந்தியாவில் 61,400க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன.