TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 23 , 2017 2521 days 914 0
  • சமீபத்தில் தெலுங்கானா மாநில அரசாங்கத்தால் பெண்கள் நலம் பேணுவதற்கென்றே தனியான 24x7 உதவி எண் ‘181’ வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த உதவி எண் ஆனது வரதட்சணை கொடுமை வழக்குகள், பெண்குழந்தைகள் விற்பனை, குடும்ப வன்முறைகள், பெண்களைக் கடத்துதல் போன்றவை தொடர்பான தொலைபேசி அழைப்புகளுக்குத் தக்க பதில்களை வழங்குகிறது.
  • மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் உள்ள பெண்களும் இந்த எண்ணை அழைக்கலாம். இது போன்ற சமயங்களில் மருத்துவ உதவி, அவசர ஊர்தி போன்ற அவசரகாலச் சேவைகளுக்கு காவல்துறையினை அழைப்பதற்குப் பதிலாக இந்த உதவி எண்ணை அழைக்கலாம்.
  • இந்த உதவி எண் ஆனது ஆண்டு முழுவதிலும் 24 மணிநேரமும் செயல்படக்கூடியது.
  • இதற்கான நிதியுதவியினை மத்திய அரசும் ஜிவிகே ஈ எம் ஆர் ஐ (GVK EMRI) யும் வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்