சமீபத்தில் தெலுங்கானா மாநில அரசாங்கத்தால் பெண்கள் நலம் பேணுவதற்கென்றே தனியான 24x7 உதவி எண் ‘181’ வெளியிடப் பட்டுள்ளது.
இந்த உதவி எண் ஆனது வரதட்சணை கொடுமை வழக்குகள், பெண்குழந்தைகள் விற்பனை, குடும்ப வன்முறைகள், பெண்களைக் கடத்துதல் போன்றவை தொடர்பான தொலைபேசி அழைப்புகளுக்குத் தக்க பதில்களை வழங்குகிறது.
மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் உள்ள பெண்களும் இந்த எண்ணை அழைக்கலாம். இது போன்ற சமயங்களில் மருத்துவ உதவி, அவசர ஊர்தி போன்ற அவசரகாலச் சேவைகளுக்கு காவல்துறையினை அழைப்பதற்குப் பதிலாக இந்த உதவி எண்ணை அழைக்கலாம்.
இந்த உதவி எண் ஆனது ஆண்டு முழுவதிலும் 24 மணிநேரமும் செயல்படக்கூடியது.
இதற்கான நிதியுதவியினை மத்திய அரசும் ஜிவிகே ஈ எம் ஆர் ஐ (GVK EMRI) யும் வழங்குகின்றன.