TNPSC Thervupettagam

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சட்டம்

May 11 , 2024 69 days 132 0
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முதல் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • கட்டாயத் திருமணம், பெண் பிறப்புறுப்பைச் சிதைத்தல் மற்றும் இயங்கலை வழியான பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிரான ஒரு நடவடிக்கை இதில் அடங்கும் ஆனால் இதில் கற்பழிப்பு என்பதன் பொதுவான வரையறை நிர்ணயிக்கப் பட வில்லை.
  • 27 நாடுகளில் உள்ள பெண்களை பாலின அடிப்படையிலான வன்முறையில் இருந்து பாதுகாப்பதை இந்த மாபெரும் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இயங்கலையில் கண்காணித்துப் பின்தொடர்தல், பாலியல் துன்புறுத்தல், வெறுப்பு அல்லது வன்முறையைத் தூண்டுதல், மற்றும் அந்தரங்கப் படங்களை ஒருவரின் அனுமதி இல்லாமல் பகிர்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான இணைய வெளி வன்முறையையும் இது குற்றமாக அறிவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்