TNPSC Thervupettagam

பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் 2020

January 18 , 2020 1681 days 597 0
  • ஒரு தொடரின் ஆறாவது பதிப்பாக 2020 ஆம் ஆண்டின் பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் என்ற அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
  • பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் என்பது பெண்களின் பொருளாதார வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவை குறித்த தனித்துவமான தரவைச் சேகரிக்கும் உலக வங்கிக் குழுவின் ஒரு திட்டமாகும்.
  • இந்தக் குறியீடானது 190 பொருளாதார நாடுகளில் பெண்களின் பொருளாதார உள்ளடக்கலைப் பாதிக்கும் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்கின்றது.
  • இது சட்டத்துடன் பெண்களின் தொடர்புகளைக் குறிக்கும் எட்டு குறிகாட்டிகளால் அமைக்கப் பட்டுள்ளது.
  • போக்குவரத்து, பணியிடம், ஊதியம், திருமணம், பெற்றோர்நிலை, தொழில்முனைவு, சொத்துக்கள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை இந்த எட்டு குறிகாட்டிகளாகும்.
  • ‘கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக்’, ‘ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா’, & ‘லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்’ ஆகிய பிராந்தியங்களில் உள்ள எந்தவொரு பொருளாதாரமும் சிறந்த சீர்திருத்தத்தை மேற்கொண்ட நாடுகளின் வரிசையில் முன்னணியில் இல்லை.
  • இந்தக் குறியீட்டில் பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்சு, ஐஸ்லாந்து, லாத்வியா, லக்சம்பர்க் மற்றும் சுவீடன் ஆகிய எட்டு பொருளாதார நாடுகள் மட்டுமே 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
  • மேற்குறிப்பிட்ட இந்த நாடுகள் இந்தக் குறியீட்டில் உள்ள எட்டு குறிகாட்டிகளிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான சட்ட நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்