TNPSC Thervupettagam

பெண்கள், வணிகம் மற்றும் சட்ட அறிக்கை 2024

March 15 , 2024 126 days 214 0
  • உலக வங்கி (WB) குழுமம் ஆனது, பெண்கள், வணிகம் மற்றும் சட்டம் 2024 என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது பெண்கள் உலகளாவிய பணியாளர் வளத்தில் நுழைவதில் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் அதிக செழுமைக்கு - தங்களுக்கு, தங்களின் குடும்பங்கள் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கு - அவர்கள் ஆற்றும் பங்கு குறித்த ஒரு விரிவான தகவலை வழங்குகிறது.
  • ஆண்கள் பெறும் சட்டப் பாதுகாப்புகளில் பெண்கள் சராசரியாக 64% மட்டுமே பெறுகின்றனர் என்ற நிலையில் இது முந்தைய மதிப்பீட்டான 77 சதவீதத்தினை விட மிகக் குறைவாகும்.
  • 98 நாடுகள் மட்டுமே சம வேலைக்கு பெண்களுக்கும் சம ஊதியம் வழங்குவதை கட்டாயப் படுத்தும் ஒரு சட்டத்தை இயற்றியுள்ளன.
  • மேலும் 35 நாடுகள் மட்டுமே ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய என்று ஊதிய-வெளிப்படைத் தன்மை நடவடிக்கைகள் அல்லது அமலாக்க வழிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டில், அரசாங்கங்கள் மூன்று வகை - ஊதியம், பெற்றோரின் உரிமைகள் மற்றும் பணியிடப் பாதுகாப்புகள் - சட்டமுறை சம வாய்ப்புச் சீர்திருத்தங்களை மேற் கொள்வதில் உறுதியாக இருந்தன.
  • குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் மற்றும் பெண்கள் கொலை செய்யப்படுதல் ஆகியவற்றிற்கு எதிராக தேவையான பலவேறு சட்டப் பாதுகாப்புகளில் மூன்றில் ஒரு பங்குப் பாதுகாப்பினையே பெண்கள் பெறுகின்றனர்.
  • 151 நாடுகளில், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடை செய்யும் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், வெறும் 39 நாடுகளில் மட்டும் தான் பொது இடங்களில் அத்தகையக் குற்றங்களைத் தடுக்கும் சட்டங்கள் உள்ளன.
  • ஊதியத்தில், ஆண்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு 1 டாலருக்கும் பெண்கள் வெறும் 77 சென்ட் மட்டுமே ஊதியம் பெறுகின்றனர்.
  • பெண்கள், ஆண்களை விட சராசரியாக ஒரு நாளைக்கு 2.4 மணிநேரத்தினை ஊதியம் இல்லாத வீட்டுப் பராமரிப்பு வேலையில் செலவிடுகிறார்கள் என்பதோடு அதில் மிகப் பெரும்பாலான நேரம் ஆனது குழந்தைகளின் பராமரிப்பிற்காக செலவிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்