இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட சர்வதேச அனுசரிப்பு தினம் ஆகும்.
அக்டோபர் 11, 2012 - பெண் குழந்தைக்கான முதல் சர்வதேச தினம் ஆகும்.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “பெண்களின் வலிமை: எழுதப்படாதது மற்றும் தடுத்து நிறுத்த முடியாதது”.
1995 ஆம் ஆண்டில், பெண்கள் பற்றிய நான்காவது உலக மாநாட்டை ஐ.நா. அமைப்பானது சீனாவின் பெய்ஜிங்கில் கூட்டியது.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரிக்க இந்த மாநாடு தீர்மானித்தது.
இந்த மாநாட்டில் பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு மிக விரிவான கொள்கை நிகழ்ச்சி நிரல் ஆகும்.