பெண் தொழிலாளர் வளத்தின் பங்கேற்பில் அதிகரிப்பு 2024
February 8 , 2025 19 days 60 0
கடந்த ஏழு ஆண்டுகளில் பெண் தொழிலாளர் வளத்தின் பங்கேற்பு விகிதத்தில் (FLFPR) நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில், 2017-18 ஆம் ஆண்டில் 23.3% ஆக இருந்த FLFPR ஆனது2023-24 ஆம் ஆண்டில் 41.7% ஆக அதிகரித்துள்ளது.
கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் உட்பட பல்வேறு பிரிவுகளில் பொருளாதாரம் மீதான நடவடிக்கைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது.
தற்போது, 21 மாநிலங்களில் FLFPR 30 முதல் 40% வரையிலான வரம்பில் உள்ளது.
ஏழு மாநிலங்கள் அல்லது ஒன்றியப் பிரதேசங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான FLFPR பதிவாகியுள்ளன என்ற நிலையில் சிக்கிம் மாநிலத்தில் அதிகபட்சமாக 56.9% விகித FLFPR பதிவாகியுள்ளது.
2017-18 ஆம் ஆண்டில், 20 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் சுமார் 20 சதவீதத்திற்கும் குறைவான FLFPR விகிதத்தினைக் கொண்டிருந்தன என்பதோடு 2023-24 ஆம் ஆண்டில் இது மூன்று மாநிலங்கள் மட்டுமே இந்த விகிதத்தினைக் கொண்டு இருந்தன.
2017-18 ஆம் ஆண்டில் சுமார் 24.6 சதவீதத்துடன், பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு அதிகரிப்பிற்கு முக்கிய உந்து சக்தியாக இருந்த கிராமப்புற FLFPR ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் 47.6% ஆக உயர்ந்தது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி, குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரைக் கொண்ட மொத்தம் 73,151 புத்தொழில் நிறுவனங்கள் ஆனது இந்தியப் புத்தொழில் நிறுவனங்கள் முன்னெடுப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.