மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பென்சில் எனும் (PENCIL- Platform For Effective Enforcement For No child Labour) மின்னணு தளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேசிய குழந்தை தொழிலாளர் பாதுகாப்புத் திட்டம் (NCLP – National Child Labour Project) குழந்தை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக 1988ல் ஏற்படுத்தப்பட்ட ஓர் மத்தியத் துறை திட்டமாகும். (Central Sector Scheme).
தேசிய குழந்தை தொழிலாளர் பாதுகாப்புத் திட்டத்தின் சட்டக் கூறுகளின் அமலாக்கத்திற்கு வலுவான செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு அமைப்பினை உருவாக்க இம்மின்னணு தளம் தொடங்கப்பட்டு உள்ளது
குழந்தை தொழிலாளர் இல்லா சமூகத்தை அடைய ஏற்படுத்தப்பட்ட NCLP-ன் திறனான விளைவுடைய செயல்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகளையும் , மாவட்ட நிர்வாகங்களையும், பொது மக்கள் மற்றும் சிவில் சமூக இயக்கங்களையும் ஒன்றிணைத்து ஈடுபடுத்தும் தளமாக பென்சில் அமையும்.
குழந்தை கண்காணிப்பு அமைப்பு, புகார்கள் தெரிவிக்குமிடம் போன்ற பல கூறுகள் இத்தளத்தில் உள்ளன.