TNPSC Thervupettagam

பென்னிகுயிக் சிலை

January 19 , 2022 1045 days 578 0
  • ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள கேம்பர்லி நகரில், கர்னல் பென்னிகுயிக் சிலையை தமிழக அரசு நிறுவ உள்ளது.
  • இது பிரிட்டிஷ் ராணுவப் பொறியாளர் பென்னிகுயிக் பிறந்த இடமாகும்.
  • கேரளாவில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு நீர்த் தேக்கத்தைக் கட்டுவதில் இவர் முக்கிய பங்காற்றியவர் ஆவார்.
  • இவர் 1895 ஆம் ஆண்டில் அந்த அணையைக் கட்டினார்.
  • மறைந்த முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று மதுரையின் தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித்துறை வளாகத்தில் கர்னல் பென்னிகுயிக்கின் உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.
  • அதைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில், லோயர் கேம்ப் என்னும் இடத்தில் தமிழக அரசு அவருக்கு ஒரு நினைவிடம் (மணிமண்டபம்) கட்டியதுடன், பென்னிகுயிக்கின் முழு உருவச் சிலையையும் அங்கு நிறுவியது.
  • தேனியில் புதிதாக கட்டப்பட்ட ஒரு பேருந்து நிலையத்திற்கும் பென்னிகுயிக் பெயர் சூட்டப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்