TNPSC Thervupettagam

பெபிகொலம்போ விண்வெளிக் கலம் வெள்ளியைக் கடந்தது

October 25 , 2020 1403 days 455 0
  • சமீபத்தில் புதன் கோளிற்கு அனுப்பப்பட்ட பெபிகொலம்போ விண்வெளிக் கலமானது வெள்ளியைக் கடந்து சென்றது.
  • ஐரோப்பிய ஜப்பானிய நாடுகளின் இந்த ஆய்வுத் திட்டமானது 17,000 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வெள்ளிக் கோளின் கறுப்பு மற்றும் வெள்ளைப் புகைப்படத்தை எடுத்துள்ளது.
  • இது 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் செலுத்தப்பட்டது. இது புதன் கோளிற்கு 7 ஆண்டு பயணக் காலத்தில் சென்று அடையுமாறு அனுப்பப் பட்டுள்ளது.
  • இது 2025 ஆம் ஆண்டில் புதனை அடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இது புதனை அடைந்த பின்பு, இரண்டாகப் பிரிந்து விடும்.
  • இது ஐரோப்பிய விண்வெளி சுற்றுவட்ட பாதைக் கலமானபெபியை விண்ணில் செலுத்துவதற்கு வழி வகுக்கும்.
  • இந்த சுற்றுவட்ட பாதைக் கலமானது புதனின் சுற்று வட்டப் பாதையில் நுழையும்
  • அதே நேரத்தில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின்மியோஎன்ற விண்கலமானது ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்து தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கும்.
  • நாசாவின் மரீனர் 10 என்ற விண்கலமானது 1970களின் மத்தியில் புதன் கோளைக் கடந்து சென்ற முதலாவது விண்வெளிக் கலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்