TNPSC Thervupettagam

பெய்ஜிங்+30 மதிப்பாய்வு குறித்த ஆசிய-பசிபிக் பிராந்திய அறிக்கை

November 28 , 2024 25 days 86 0
  • 'பாலினச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தலுக்கான புதிய பாதைகளை வகுத்தல்: பெய்ஜிங்+30 மதிப்பாய்வு குறித்த ஆசிய-பசிபிக் பிராந்திய அறிக்கை' என்ற ஒரு தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
  • பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கானத் தளம் ஆனது 1995 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து பல பரிணாமங்களைக் கண்டுள்ளது.
  • வடக்கு மற்றும் மத்திய ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் சமூகப் பாதுகாப்புப் பலன்களில் (முறையே 57.4 சதவீதம் மற்றும் 47.0 சதவீதம்) குழந்தைகளுக்குப் (0 முதல் 18 வயது வரை) பயன் மிகு உயர் மட்டப் பலன்களை ஒப்பீட்டளவில் வழங்கியுள்ளன.
  • இது பிராந்தியச் சராசரியான 18.3 சதவீதத்தை விட அதிகமாகும்.
  • இந்தியாவில் பாலினம் சார்ந்த வரவு செலவு ஒதுக்கீட்டில் 218% தசாப்த கால அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • இந்தியாவைத் தவிர, பாலினம் சார்ந்த நடவடிக்கைக்கான நிதி ஒதுக்கீட்டினை மிக வெற்றிகரமாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் ஒன்றாக பிலிப்பைன்ஸ் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.
  • பெண்களுக்குப் பயனளிக்கும் முக்கியத் திட்டங்கள் விலக்கப்பட்டதாலும், பாலினம் சார்ந்தப் பகுத்தறியப்பட்டத் தரவு இல்லாததாலும், இந்தியா தனது பாலினம் சார்ந்த நடவடிக்கைக்கான நிதி ஒதுக்கீட்டின் வரையறுக்கப்பட்ட செயல்திறனுடன் போராடி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்