பெய்டோ அமைப்பு தற்பொழுது முழுவதும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக சீனா கூறியுள்ளது.
இது அமெரிக்காவின் புவியிடங்காட்டி, ரஷ்யாவின் குளோனாஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கலிலியோ ஆகியவற்றை உள்ளடக்கிய விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளை அளிக்கும் புகழ்பெற்ற குழுவில் இணைகின்றது.
இந்தியாவினுடையது “இந்தியத் திரள்களுடன் கண்காணிப்பு (NaVIC/Navigation with Indian Constellation)” என்று அழைக்கப் படுகின்றது.
இந்தியா தனது சொந்தக் கண்காணிப்பு அமைப்பான இந்தியப் பிராந்தியக் கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைப்பை (IRNSS - Indian Regional Navigation Satellite System) மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது.
IRNSS என்பது இந்தியாவினால் மேம்படுத்தப்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற பிராந்தியக் கண்காணிப்பு செயற்கைக்கோள் அமைப்பாகும்.
இது இந்தியாவில் உள்ள பயனாளர்களுக்கும் அதன் எல்லையிலிருந்து 1500 கிலோ மீட்டர் வரையுள்ள பயனாளர்களுக்கும் துல்லியமான இருப்பிடம் குறித்த தகவல் சேவையை அளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.