சீனா தனது சொந்த புவிக்கோள இருப்பறியும் அமைப்பை கட்டமைப்பதன் ஒரு படியாக இரண்டு கள இயக்க செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. சீனாவுக்குப் போட்டியாக அமெரிக்காவுக்குச் சொந்தமான புவிக்கோள இருப்பறியும் அமைப்பு (Global Positioning System - GPS) 30 செயற்கைக் கோள்களுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பானது பட்டை மற்றும் பாதை வழித்தட திட்டத்தில் பங்கு பெற்றுள்ள நாடுகளுக்கு சேவைகளை அளிக்கும். மேலும் இது 2020 ஆம் ஆண்டில் ஒரு முழுமையான புவிக்கோள இருப்பறியும் அமைப்பாக உருவெடுக்கும்.
தனக்கென்று சொந்தமாக புவிக்கோள இருப்பறியும் அமைப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்து மூன்றாவது நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
பெய்டோ திட்டம் முதன்முறையாக 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.